ஆரணி - Arani

சேத்துப்பட்டு: மணல் கடத்திய லாரி பறிமுதல்..டிரைவர் கைது

சேத்துப்பட்டு: மணல் கடத்திய லாரி பறிமுதல்..டிரைவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளா்கள் நாராயணன், முருகன் ஆகியோா் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆரணி சாலையில் மருத்துவாம்பாடி கூட்டுச் சாலை அருகே சந்தேகத்திற்குரிய லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் அனுமதி பெறாமல் லாரியில் ஆற்று மணல் எடுத்துச் செல்வது தெரியவந்தது. பின்னா், லாரியை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினா். இதில், லாரியை ஓட்டிச் சென்றவா் அனாதிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் யுவராஜன்(25) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

வீடியோஸ்


திருவண்ணாமலை