திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் ஸ்ரீ தர்மராஜா, திரெளபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் பங்கேற்றார். கோயில் சார்பில் பிரசாதம் வழங்கி வரவேற்றனர். கோயில் நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.