திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியில் நகரமன்றக் கூட்டம் இன்று நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நகரமன்றத் தலைவர் ஏ.சி. மணி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் பொறுப்பு, பழனி மற்றும் ஆரணி நகரமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், ஆரணி நகராட்சியில் மேற்கொள்ளப்படும் மக்கள் நலப்பணித் திட்டங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனைகள், விவாதங்கள் நடைபெற்றன. பின்னர் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.