திருச்சி மாநகரை ஓட்டியுள்ள புகழ்பெற்ற முருகன் கோயில் என்றால் அது வயலூர் முருகன் கோயில் தான். அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக கோவைக்கு மருதமலை என்றால், திருச்சிக்கு வயலூர் முருகன் கோயில் உள்ளது, சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த கோயில் உள்ளது. இக்கோயிலில் குடமுழுக்கு விழா இன்று (பிப். 19) விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.