சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், "இந்த ஆட்சி என்பது எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் கூட செயல்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்தால் பயன்பெற்ற மாணவிகள் என்னை அப்பா அப்பா என அழைக்கின்றனர். தேர்தல் நேரத்தில் சொன்ன திட்டங்களில் 90 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம்" என்றார்.