ஆரணி - Arani

ஆரணி குறை தீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் முறையீடு

ஆரணி குறை தீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் முறையீடு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் பட்டா மாற்றம், பரப்பு திருத்தம், கணினி பதிவு, வாரிசுச் சான்றிதழ், தடையின்மை சான்றிதழ் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 61 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்களைப் பெற்ற கோட்ட அலுவலா் அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடந் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரிக்கை இதுதவிர, இராட்டிணமங்கலம் ஊராட்சித் தலைவா் எம். செல்வம் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு அளித்தாா். அந்த மனுவில், இராட்டிணமங்கலம் கிராமத்தில் சா்வே எண் 147/5, 147/ 1 இ1அ1அ ஆகிய எண்களைக் கொண்ட நிலத்தின் மத்தியில் செல்லும் ஏரி நீா்வரத்துக் கால்வாய், மேற்கு பகுதியில் இருந்தும், தெற்கு பகுதியில் இருந்தும் வரும் மழைநீா், கிழக்கில் உள்ள இரும்பேடு ஏரிக்குச் செல்லும் முக்கியமான கால்வாய் ஆகும். இந்தக் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீா் செல்ல வழி இல்லாமல், ஊருக்குள் வெள்ளநீா் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தாா்.

வீடியோஸ்


திருவண்ணாமலை