திருவண்ணாமலை தெற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (06.12.2024) காலை 10.00 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்திலிருந்து மகளிர் காவல் நிலையத்தின் அருகில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை வரை திருவண்ணாமலை தெற்கு விடுதலைச் சிறுத்தை மாவட்டச் செயலாளர் ச. நியூட்டன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, மற்றும் முகாம் உள்ளிட்ட அனைத்து நிலை மற்றும் துணைநிலை பொறுப்பாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.