திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஆர்டிஓ அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. பள்ளி துணை ஆய்வாளர் பாபு, வேளாண்மை உதவி இயக் குநர் புஷ்பா, உதவியாளர் கோபி மற்றும் பிறதுறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், ஆரணி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட தாலுகாக்களில் இருந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.
இக்கூட்டத்தில், வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், கூட்டு பட்டா. தமிழ் நிலம் திருத்தம், பட்டா ரத்து, மகளிர் உரிமைத்தொகை, ஆக்கிரமிப்பு அகற்றம், குடும்ப அட்டை, விதவை பென்ஷன், கலப்பு திருமணம் சான்று, கிராம கணக்கில் மாற்றம், நில அளவை, கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றுதல் கிராம சபாகூட்டம் நடத்த கோரு தல், ஊராட்சி மன்ற நிதி முறைகேடு, பஸ் வசதி, மாற்றுத்திறனாளிக்கு இல வச 3 சக்கர வாகனம், மது விற்பனை, மின் கம்பம் அகற்ற நடவடிக்கை என மொத்தம் 51 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
ஆர்டிஓ அலுவலக கண்காணிப்பாளர் தர ணிகுமரன் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.