போலி தங்க பிஸ்கட் விற்பனை முயற்சி ரவுடி உட்பட 14 பேர் கைது

60பார்த்தது
தேனி மாவட்டம் தொப்பம்பட்டி கருமலை, உத்தமபாளையத்தைச் சேர்ந்த மணிவண்ணன், முருகன் மற்றும் பல்லடம் மகாலட்சுமி நகர் சேர்ந்த மாரியப்பன்  நண்பர்களான மேற்கூறிய 4 பேரும், தங்க பிஸ்கட் வாங்கி விற்பனை செய்ய திட்டமிட்டனர். இதற்காக ஆன்லைனில் 1 பிஸ்கட் ஒன்று 500 ரூபாய் என்ற கணக்கில் 5 தங்க பிஸ்கட்டுகள்  வாங்கி,   அவற்றை ஒரிஜினல் தங்க பிஸ்கட் என்று கூறி பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டனர்.  
ஈரோடு சுரேஷ் , பொள்ளாச்சி அர்ஜுன் ஆகிய புரோக்கர்களை நாடியுள்ளனர். பல்லடம் அடுத்த மகாலட்சுமி நகரில் வைத்து தங்க பிஸ்கட்டுகளை கைமாற்ற  திட்டமிட்டுள்ளனர். புரோக்கர் சுரேஷ் மூலம் தகவல் நண்பரான நாமக்கல் பிரபல ரவுடி காசிராஜ்க்கு தெரிய வருகிறது. காசிராஜ் அந்த தங்க பிஸ்கட்டுகளை பறித்துச் செல்ல திட்டம் தீட்டினார். காசிராஜ் மற்றும் இவரது கூட்டாளிகள் விஜயகுமார், கோபிநாத், கிருஷ்ணன், சுரேஷ், ரகு, மணிராஜ், மணி  ஆகிய 8 பேர் கொண்ட கும்பல்  கைமாறும் தங்க பிஸ்கட்டுகளை பறித்துச் செல்ல  திட்டமிட்டு மகாலட்சுமி நகர் வந்துள்ளனர். இத்த தகவல்  பல்லடம் போலீசருக்கு தெரிய வர, மகாலட்சுமி நகரில் அனைவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து கார், ஹாக்கி பேட் மற்றும் 5 தங்க பிஸ்கட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.  இச்சம்பவத்தில் 14 பேரை கைது செய்து நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி