திருப்பூர்: சிபிஐ, சிபிஎம், திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, மே 17 இயக்கம், ஆதி தமிழர் பேரவை, நவீன மனிதர்கள் உள்ளிட்ட அமைப்பினர் இணைந்து அணைப்புதூர் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்.
சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையை தடை செய்ய வலியுறுத்தியும், மாணவர்களிடையே மூடநம்பிக்கை பிரச்சாரம் செய்து அவர்களை தவறான வழிக்கு அழைத்துச் சென்றதை கண்டித்தும் மாணவர்கள் மத்தியில் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்தும் பெண்களை போக பொருளாக சித்தரித்து ஆபாசமாக யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பேசி பதிவிட்டு வருவதை கண்டித்தும் அறக்கட்டளையின் சட்டவிரோத பண பரிமாற்றத்தை ஆய்வு செய்யக் கோரியும் முற்போக்கு இயக்கங்கள் சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அவிநாசி போலீசார் இந்த முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு தெரிவித்த நிலையில் அணைப்புதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணுவுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.