பல்லடத்தில் சிக்கிய கஞ்சா தம்பதி உட்பட 6 பேர் கைது

55பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் விற்பனைக்காக  இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி செல்வதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பல்லடம் அருகே சின்னக்கரை லட்சுமி மில் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது வடமாநில கும்பல் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து கொண்டதால் போலீசார் அவர்கள் வாகனத்தை சோதனையிட்டனர் இதில் விற்பனைக்காக 3 கிலோ கஞ்சா கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ஒடிசாவை சேர்ந்த திலீப் ரானா, சினோராமு, சரத்லூகா மற்றும் திருப்பூர் திருமுருகன் பூண்டியை சேர்ந்த பிரசாத் என்ற கும்பலை கைது செய்தனர். இதே போல் அருள்புரம் அண்ணாநகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராம்குமார் ஷா மற்றும் பிரவீனா கவுண்டி என்ற வடமாநில தம்பதிகள் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து வடமாநில தம்பதிகள் இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த இரு கும்பலிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் 4 செல்போன்கள் மற்றும் 28000 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன சோதனையின் போது வடமாநில கும்பல் அடுத்தடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி