அருள்புரத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் அவதி

60பார்த்தது
அருள்புரத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் அவதி
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலை கோவை, கேரளா, பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கியசாலையக இருந்து வருகிறது. இந்த சாலையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றது.

இந்த சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த சாலையில் அருள்புரம் (கணபதிபாளையம் செல்லும் சாலை அருகில்) மழை நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. சிறிய மழை பெய்தால் கூட மழை நீர் அதிகமாக சாலையை தேங்கி நிற்கிறது. நேற்று முன்தினம் (அக்.,2) பெய்த மழையால் அருள்புறம் சாலையில் மழை நீர் அதிகமாக நேற்று வரை தேங்கி நிற்கிறது.

சிறிது மழை பெய்தாலும் கூட மழைநீர் அருள்புரத்தில் தேங்கி நிற்கும் நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகமும், மாநில நெடுஞ்சாலை துறையும் அருள்புரம் சாலையில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி