பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த விஜயகுமார் கடலூருக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுரேஷ் பல்லடம் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து அவர் பல்லடம் புதிய துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். அவருக்கு பல்லடம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல்லடம் உட்கோட்டத்தில் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து தன்னிடம் புகார் தெரிவிக்கலாம் என்றும் புகார்களின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.