பல்லடத்தில் கஞ்சா கடத்தியவர் கைது 20 கிலோ பறிமுதல்

64பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரடிவாவி பகுதியில் போலீசார் வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே கார் ஒன்று வந்துள்ளது. தொடர்ந்து காரை நிறுத்தி போலீசார் விசாரணை செய்ய முயன்ற போது அதன் ஓட்டுனர் அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து காரினுள் வைத்திருந்த துணிப்பையை திறந்து பார்த்த போது அதனுள் 18 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த பின் காரை ஓட்டி வந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வாடகைக்கு காரை பதிவு செய்து திருப்பூரில் இருந்து ஒத்தக்கால்மண்டபம் வரை காரை எடுத்துச் சென்றதும் மேலும் காரை பதிவு செய்த நபரின் செல் நம்பரை வைத்து பரிசோதனை செய்ததில் அவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த அஜ்மல் 31 என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். பல்லடம் அருகே வாடகைக்கு கார் எடுத்து கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி