திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி பகுதியில் இன்று வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்பு பூனை ஒன்று கிணற்றில் விழுந்து விட்டதாக உடுமலை தீயணைப்பு துறையினர்க்கு தகவல் கிடைத்தது. பின்னர் நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு சென்று சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி 80 அடி ஆழம் 60 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த வளர்ப்பு பூனையை மீட்டு உரிமையாளரிடம் கொடுத்த நிகழ்வு நெகிழ்ச்சி ஏற்படுத்தியது