திருப்பூர், உடுமலை மடத்துக்குளம் பகுதிகளில் அமராவதி அணை பாசனத்தில் விவசாயிகள் தென்னை வாழை கரும்பு அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளன இந்த நிலையில் தற்பொழுது கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் நிலவி வருவதால் பாசனத்திற்காக நீர் தேவை அதிகரித்துள்ளது எனவே அமராவதி அணையில் தண்ணீர் இருப்பதால் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாயில் திறக்க விவசாயிகள் தமிழக முதல்வருக்கு மனு ஒன்று அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் தற்பொழுது அமராவதி அணை மொத்த 90 அடியில் 89. 50 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.