திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. கடந்த சில மாதங்களாகவே இயந்திரங்கள் பழுது அடைந்த காரணத்தால் ஆலை இயங்கவில்லை. எனவே சர்க்கரை ஆலையை புனரமைக்க ரூ. 100 கோடி நிதி தமிழக அரசு ஒதுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வரும் 4ஆம் தேதி மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகம் பகுதியில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என இன்று (செப் -27) அறிவித்துள்ளனர்.