திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரியவாளவாடியில் செயல்பட்டு வரும் யூனியன் வங்கி ஏடிஎம்மை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். 24 மணி நேரமும் செயல்பட்டு வந்த இந்த ஏடிஎம் ஆனது சிறிது காலமாக இரவு 10. 30 மணி வரை பயன்பாட்டில் இருந்த நிலையில் சில தினங்களாகவே இரவு 8 மணிக்கு பூட்டி விடுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.