மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

80பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி 13வது வார்டு கணேஷ்புரம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் நீண்ட காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தற்பொழுது காயத்ரி பாத்திரக்கடை மற்றும் விக்னேஸ்வரா திருமண மண்ட உரிமையாளர் செந்தில் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வணிக வளாகம் கட்டி வருகின்றார் இதனால் அவசர தேவைக்காக அவசர ஊர்தி கூட வர முடியாத நிலை உள்ளது சம்பந்தப்பட்ட மடத்துக்குளம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கடந்த மே மாதம் 31ஆம் 5 தேதி புகார் மனு வழங்கப்பட்டது தற்பொழுது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் வணிக வளாகம் கட்டி வருகின்றார் எனவே ஆவேசம் அடைந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகத்தை இன்று(செப்-27) 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் போராட்டத்தை மக்கள் தற்காலிகமாக கைவிட்டனர் மேலும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடம் கிடைக்காதபட்சத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி