
சிவன்மலையில் ஷட்டர் திருடிய இரண்டு பேர் கைது
காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் சிவன்மலை ஊராட்சி குருக்கத்தி சாலையில் உள்ள அரசு நர்சரி உள்ளே காலி இடத்தில் வைக்கப்பட்டிருந்த 14 ஷட்டர்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இது குறித்து தலைவர் துரைசாமி காங்கேயம் காவல் துறையில் புகார் கொடுத்திருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னிமலை சேர்ந்த முருகானந்தம் (வயது 26) மற்றும் சஞ்சீவி (24) ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.