காங்கேயத்தில் இறந்த ஆடுகளுடன் காத்திருப்பு போராட்டத்தில்

74பார்த்தது
காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி டிஎஸ்பி மாயவன், நகராட்சி அதிகாரிகள்   பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த வேளையில் ஆத்திரமடைந்த விவசாயிகள் காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே இறந்த ஆடுகளுடன்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மேலும் விவசாயிகள் வளர்க்கும் ஆடுகளுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் இருந்து விவசாயிகள் வந்தவண்ணம் உள்ளனர். போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

உணவகங்களில் இருந்து மாமிச கழிவுகளை கொட்டுவதால் அதை உண்ணும் நாய்கள் வெறிநாய்களாக மாறி உணவு கிடைக்காத போது விவசாயிகளில் பட்டியில் உள்ள ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை கொடூரமாக தாக்கி உணவாக உட்கொள்கின்றது. அதனால் மாமிச கழிவுகளை கொட்டும் உணவகங்கள் மீது கடுமையான சட்டம் இயற்றி வழக்கு பதிய வேண்டும்  அதிகப்படியான அபராதம் விதிக்க வேண்டும் என ஆவேசம் அடைந்தனர். மேலும் நாய்களை  கட்டுப்படுத்த புதிய சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி