காங்கேயம் பகுதிகளில் வெறி நாய்கள், விவசாயிகள் வளர்க்கும் ஆடு, கோழிகளை கடித்து கொன்று விடுவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும், விவசாய சங்கங்களும் போராடி வருகின்றனர். செம்மண்குழிபாளையத்தில் பொன்னுசாமி செம்மறி ஆடுகளைகடந்த 14 தேதி. அதிகாலை அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள் பட்டிக்குள் நுழைந்து ஆடுகளை கடித்தும் துரத்தியது. தப்பிய செம்மறி ஆடுகள் தெறித்து ஓடிய போது 40 அடி கிணற்றில் விழுந்தது. இதில் 17 ஆடுகள் பலியாகியது.
தொட்டியப்பட்டியில் 19ம் தேதி ஆட்டு பட்டியில் 70 செம்மறி ஆடுகளை 4 தெரு நாய்கள் கடித்ததில் 27 ஆடுகள் பலியானது. 10க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம் அடைந்தது. ஆத்திரம் அடைந்த விவசாயிகள் காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே இறந்த ஆடுகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து யூடியூப் சேனல் நடத்தி வரும் திருமதி. ஆனந்தி என்பவர் அவரது ஆனந்தி வெங்கட் சேனலில் அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு தவறான பதிவை பகிர்ந்துள்ளார், இதனை கண்ட பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களும், விவசாய சங்கங்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அவரை கண்டித்து நேற்று காங்கேயம் காவல் ஆய்வாளரிடம் மோகன் குமார் மூலம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த மனுவை பெற்ற போலீசார் சி. எஸ். ஆர். பதிவு செய்து ரசீது வழங்கினர்.