தூக்கில் தொங்கிய கர்ப்பிணி மனைவி; கணவர் கைது

56பார்த்தது
பல்லடம் வடுகபாளையம் விடுதி சாலையைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசுவாமி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இரண்டாவதாக தென்காசியை சேர்ந்த சுதா (வயது 29) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து இருவரும் வடுகபாளையம் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இதற்கிடையே சுதா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம்(செப்.21) வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுதா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் பல்லடம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடம் சென்ற போலீசார் சுதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அவரது தாயார் ஜோதி பல்லடம் காவல்துறையில் புகார் கொடுத்தார். புகாரில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதை அடுத்து காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் சுதாவை தற்கொலை செய்ய தூண்டியதாக முத்துக்குமாரசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி