காங்கேயத்தில் வெறி நாய்கள் கடித்து 27 ஆடுகள் பலி

64பார்த்தது
காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு பகுதியான தொட்டியபட்டி அமரங்காட்டு தோட்டத்தில் விவசாயி மோகன்குமார் என்பவர் குடும்பத்துடன்  விவசாயம் செய்து வருகிறார். இப்பகுதிகளில் தண்ணீர் பிரச்னை தொடர்கதையாக உள்ளதால் ஆடு, மாடு கால் நடைகளை வளர்த்து வருகின்றார். மேலும் காங்கேயம் பகுதியில் விவசாயிகளின் வருமானமே இந்த கால்நடை வளர்ப்பை நம்பித்தான் உள்ளது. இந்நிலையில் விவசாயி மோகன்குமார் சுமார் 70 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று பகலில் ஆடுகளை மேய்ந்து விட்டு இரவு தோட்டத்தில் உள்ள பாட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றுவிட்டார். இன்று காலை பட்டிக்கு சென்று பார்த்தபோது 27 ஆடுகள் வெறிநாய்கள் கடித்து இறந்து கிடந்துள்ளது. மேலும் 10 திற்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகிறது. இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் என தெரிவிக்கின்றனர். மேலும் உயிருக்கு போராடும் ஆடுகளின் மதிப்பு ரூ. 1 லட்சம் எனவும் கூறப்படுகின்றது. விவசாயி மோகன்குமாருக்கு ரூ. 4 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி