மின்சார வாகனத் துறை எதிர்பார்த்த அளவு வளர்ச்சி அடையாததைத் தொடர்ந்து, மத்திய அரசு புதிய "PM E-DRIVE" திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதது. மேலும், இத்திட்டத்திற்காக ரூ.10,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . இந்த திட்டத்தில் பல்வேறு மின்சார வாகனங்களுக்கு குறிப்பாக, மின்சார இரு சக்கர வாகனங்கள், மின்சார மூன்று சக்கர வாகனங்கள், மின்சார அவசரஊர்தி வாகனங்கள், மின்சார கனரக வாகனங்களுக்கு ரூ.3,679 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.