வெள்ளகோவிலில் 142 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

64பார்த்தது
வெள்ளகோவிலில் 142 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் 142 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று(செப்.24) நடைபெற்றது. முதலமைச்சர் ஆணைக்கிணங்க  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அறிவுறுத்தலின்படி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமை தாங்கினார். வெள்ளகோவில் நகராட்சி தலைவர் கனியரசி முத்துக்குமார் சைக்கிள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். 87 மாணவர்கள் 55 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் விஜயலட்சுமி குமரவேல் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி