தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட கா.ராமச்சந்திரன், அரசு தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலா துறை அமைச்சராக இருந்த அவர் விடுவிக்கப்பட்டு, அரசு தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் ஆகியோரும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கோவி. செழியன், ஆர். ராஜேந்திரன், சா.மு.நாசர், செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சர்களாக இன்று (செப்., 29) பதவியேற்கவுள்ளனர்.