மினிவேன் மீது பேருந்து மோதி விபத்து.. 7 பேர் பலி

52பார்த்தது
மினிவேன் மீது பேருந்து மோதி விபத்து.. 7 பேர் பலி
குஜராத் மாநிலம் தேவ்பூமி திவார்கா மாவட்டம் அருகே நேற்று (செப்.28) இரவு 7.30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி எதிரே வந்த மினிவேன் மீது அதிவேகமாக மோதியது. மேலும், எதிரே வந்த கார், பைக் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில், மினிவேனில் பயணித்த 6 பேர், பேருந்தில் பயணித்த ஒருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர்.