திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள திடலில் நேற்று காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர் மற்றும் சென்னிமலை மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒன்றிய கழக செயலாளர் என். எஸ். என். நடராஜ் தலைமை தாங்கினார். காங்கயம் நகரச் செயலாளர் வெங்கு ஜி. மணிமாறன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர் மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் தாமோதரன் எம். எல். ஏ. கலந்து கொண்டார்கள்.
விழாவின் முன்னதாக கலை நிகழ்ச்சிகளுடன் விழா துவங்கியது.
நிகழ்ச்சிக்கு என். என். நடராஜ்
வரவேற்புரை ஆற்றினார். வருகை தந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு கட்சி நிர்வாகிகள் உட்பட 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்