காங்கேயம் அடுத்த வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயி செந்தில்குமார் என்பவரது தோட்டத்தில் உள்ள ஆட்டு பட்டியில் இருந்த 25க்கும் மேற்பட்ட ஆடுகளை நேற்று நாய்கள் துரத்தி கடித்ததில் 3 செம்மறி ஆடுகள், 4 வெள்ளாடுகள் பலியானது. இதன் மதிப்பு சுமார் ரூ. 75 ஆயிரம் ஆகும். மேலும் 3 க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.