இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்.29) துணை முதல்வராக பதவி ஏற்கிறார். இதற்கு திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “வருங்கால தமிழ்நாட்டை வழிநடத்தும் இளஞ்சூரியனாய், புதியதொரு தடம் பதிக்கும் இளைஞர்களின் நம்பிக்கை நாயகன். புதிய சகாப்தத்தைத் தொடங்கும் துணை முதலமைச்சர் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.