‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து பணியாற்றுவேன் என்று துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை அளித்த முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றோம். பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதலமைச்சரின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம் என கூறியுள்ளார்.