காங்கேயம் தொட்டி பாளையத்தில் பாஜக தொகுதி சார்பில் வடக்கு ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். கூட்டமானது மாவட்ட துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாயிண்ட் மணி, ஒன்றிய தலைவர் கிரிஷ்ணமுர்த்தி, நகர தலைவர் சிவ பிரகாஷ், ஒன்றிய துணை தலைவர் குமார் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது போதைப் பொருட்களின் நடமாட்டம் அண்ணன் திருமாவளவன் தெரிவித்ததை போல் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு நான் மாநாடு நடத்தப் போகின்றேன் என்றார். எங்கு பார்த்தாலும் போதை தலைவிரித்து ஆடிக் கொண்டுள்ளது. இது கட்டுப்படுத்தப்பட வேண்டும். பள்ளியில் வகுப்பு ஆசிரியர் மாணவியை போதைப் பொருட்கள் பயன்படுத்த அழைக்கின்றார். எப்படி போதை எல்லோரையும் பாதித்துக் கொண்டுள்ளதோ அதேபோல் நாய்களின் தொந்தரவு மிக அதிகமாக இருக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி என்ன நினைக்கிறார்கள் என்றால் குடும்ப கட்டுப்பாடு செய்து நாய்களை அப்படியே விடலாம் நினைக்கிறாங்க. நாய்களினால் ஆடுகள் கடித்து இறக்கின்றது. அரசாங்கம் ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வர வேண்டும். பள்ளியில் கிடக்கிற முட்டை வெளியே கிடைக்குது. அதனால அவர்களுடைய ஒரே சிந்தனை உதயநிதி துணை முதல்வர் ஆக்குவது.