காங்கயத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க திருப்பூர் மாவட்ட மாநாடு நேற்று(செப்.21) இரவு காங்கேயம் சீரணி அரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஞானசேகரன் , அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கரன் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நிர்வாக வசதி மற்றும் பொதுமக்களின் வசதிக்காக காங்கேயம் தாலுகாவை இரண்டாக பிரித்து வெள்ளகோவில் தலைமையாக கொண்டு தனி தாலுக்காவாக அமைக்க வேண்டும். வெள்ளகோவில் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். காங்கேயம் நகரத்தில் புகழ்பெற்ற காங்கேயம் இன காளை மாட்டு சிலை நிறுவிட வேண்டும். பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்தி, புதிய ஓய்வு திட்டத்தில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.