தாராபுரம் - Dharapuram

திருப்பூர்: சின்ன வெங்காயத்தை பட்டறை போட்டு இருப்பு வைக்கும் விவசாயிகள்

திருப்பூர்: சின்ன வெங்காயத்தை பட்டறை போட்டு இருப்பு வைக்கும் விவசாயிகள்

சின்ன வெங்காயம் கொள்முதல் விலை சரிந்ததை அடுத்து பட்டறை போட்டு விவசாயிகள் இருப்பு வைத்து வருகின்றனர். தாராபுரம் பழைய அமராவதி புதிய அமராவதி மற்றும் பி.ஏ.பி பாசன பகுதிகளிலும் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தாராபுரம் சத்திரம், செலாம்பாளையம், குண்டடம், சங்கரண்டாம்பாளையம் பகுதிகளில் மொத்த வியாபாரிகள் சின்ன வெங்காயத்தை கிலோ ரூபாய் 35 முதல் கொள்முதல் செய்கின்றனர்.  சின்ன வெங்காயத்திற்கு இடுபொருள் செலவு விதை வெங்காயம் கூலி என ஒரு லட்சம் வரை ஏக்கருக்கு செலவு செய்துள்ளதால் இந்த விலை கட்டுப்படியாகவில்லை. எனவே பட்டறை போட்டு விவசாயிகள் வெங்காயத்தை இருப்பு வைக்கின்றனர். ஜனவரி மாதத்தில் வெங்காயம் கிலோ ரூபாய் 60 வரை விலை போகும் என்ற நம்பிக்கையில் பட்டறை வசதி உள்ள விவசாயிகள் இருப்பு வைத்து வருகின்றனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా