அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் ஐ.டி உருவாக்க உத்தரவு
உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் பிற தகவல் தொடர்புகள் பெரும்பாலும் ஆன்லைனில் செய்யப்படுவதால் மாணவர்கள் வசதிக்காக பள்ளிகளிலேயே இ-மெயில் ஐ.டி உருவாக்கி தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ரூ.20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இ-மெயில் ஐ.டி உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.