உத்திரப் பிரதேச மாநிலத்தில் இளைஞர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக பாஜக எம்.பி வினோத் பிந்த் என்பவர் விருந்து வைத்தார். அந்த விருந்தில், கலந்துகொண்ட தொண்டர்கள் ஆட்டுக்கறி குழம்பில் Piece இல்லை என கூறி உணவு பரிமாறுபவர்களுடன் சண்டையிட்டனர். ஒரு புறம் தீவிரமாக சண்டை நடந்து கொண்டிருந்த நிலையில், சிலர் கையில் கிடைக்கும் ரொட்டிகள், ஆட்டுக்கறியை எடுத்துக் கொண்டு கூட்டத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது.