திருச்சி ஜீயபுரம் கொடியாலம் பகுதியைச் சேர்ந்தவர் மதிர்விஷ்ணு இவர் அப்பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பவர் கொலை வழக்கில் குற்றவாளியாக சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்திருந்தார். மதிர் விஷ்ணு நேற்று கொடியாலம் கிராமத்திலிருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற பேருந்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது திண்டுக்கரை அருகே பேருந்து வந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் மதிர் விஷ்ணுவை கத்தியால் சரமாரியாக தாக்கினர் பேருந்தில் இருந்து இறங்கி ஓடிய மதிர் விஷ்ணுவை துரத்தி துரத்தி வெட்டிவிட்டு தப்பி ஓடினார் இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என கூறியுள்ளனர் இது குறித்து ஜீயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைத்து வருகின்றனர்.