துறையூர் சிவன் கோவிலில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

71பார்த்தது
துறையூர் சிவன் கோவிலில் அதிகாலை முதல் குவிந்த ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதலாம் நாளை முன்னிட்டு சரண கோஷம் முழங்க பக்தியுடன் மாலை அணிந்தனர்!

திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் உள்ள நர்த்தன விநாயகர் சன்னதியில் கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. 108 வகையான மூலிகைகள் பல்வேறு வகையான பல வகைகள் ஹோம திரவியங்கள் கொண்டு யாக பூஜை நடத்தப்பட்டது.

தொடர்ந்து நர்த்தன விநாயகர் ஐயப்பன் ஆகிய தெய்வங்களுக்கு பால் தயிர் இளநீர் மஞ்சள் குங்குமம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களான சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
ஐயப்பனுக்கு பிரசித்தி பெற்ற நெய் அபிஷேகம் மகா தீபாராதடனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஐயப்பனுக்கு முன்னிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷம் முழங்க பக்தியுடன் மாலை அணிந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி