ஈரோடு ஒரிச்சேரி புதூரில் இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானம் இல்லை என தெரிகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருவதாகவும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், இன்று அப்பகுதி மக்கள், இறந்த மூதாட்டியின் சடலத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பவானி- சத்தியமங்கலம் பிரதான சாலையில் நடந்த இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.