தமிழ்நாடு அரசின் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கோதுமை ஒதுக்கீட்டை மாதம் 8,500 டன்னில் இருந்து 17,100 டன்னாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த மாதமே கோதுமை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது. இதையடுத்து, ரேஷன் அட்டைதாரர்கள் அரிசிக்குப் பதில் கோதுமையை இலவசமாகப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் 5 கிலோவும், மற்ற இடங்களில் 2 கிலோவும் கோதுமை வழங்கப்பட உள்ளது.