கர்நாடகாவைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண், பகுதி நேர வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது, அமேசான் நிறுவனத்தில் வேலை என இன்டாகிராமில் விளம்பரம் வந்துள்ளது. மேலும், அதில் ஒரு Link கொடுக்கப்பட்டு இருந்தது. அதனை அர்ச்சனா க்ளிக் செய்ததும் அவரின் வாட்ஸ்அப்பிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. முதலில் அவரை நம்ப வைப்பதற்காக சில வேலைகளை கொடுத்துவிட்டு, பின்னர் அவரிடம் இருந்து சுமார் ரூ.1.94 லட்சத்தை திருடியுள்ளனர்.இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.