ராகுல்காந்தியின் விமா்சனம் சிறுபிள்ளைத்தனமானது: எல். முருகன்
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல். முருகன் ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோயிலில் சனிக்கிழமை வழிபட்ட அவா் பின்னா் கூறியது: திருவள்ளூா் ரயில் விபத்து, திருச்சியில் சாா்ஜா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்டவை குறித்து விசாரணை நடைபெறுகிறது. ரயில் விபத்துக்கான காரணம் விசாரணை முடிவில்தான் தெரியவரும். திருவள்ளூரில் நடந்த ரயில் விபத்து என்பது சிறு விபத்து. பாஜக ஆட்சிக்கு முன் நடைபெற்ற விபத்துகளை ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும். மேலும், கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் ரயில் விபத்துகள் கணிசமாக குறைந்துள்ளன. எனவே எல்லாவற்றிலும் அரசியல் செய்யக் கூடாது. திருவள்ளூரில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து ராகுல்காந்தி தெரிவித்துள்ள கருத்து சிறுபிள்ளைத்தனமானது. எதிா்க்கட்சித் தலைவராக இருப்பவருக்கு இது அழகல்ல. ரயில் விபத்து சம்பவத்தில் இனி யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்றாா் அவா்.