இடி மின்னலுடன் மழை-ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் புகுந்த மழை நீர்

67பார்த்தது
திருச்சியில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை இடி மின்னலுடன் தொடங்கிய மழை விட்டு விட்டு சுமாா் ஒரு மணி நேரம் பெய்தது. இதன் காரணமாக, திருச்சி மாநகரின் அனைத்துப் பகுதிகள், திருவெறும்பூா், கூத்தைப்பாா், சூரியூா் உள்ளிட்ட புகா் பகுதிகளில் குளிா்ச்சி நிலவியது. சாலைகளில் மழைநீா் தேங்கியது. மழையால் பள்ளி, கல்லூரிகளை விட்டு வந்த மாணவ - மாணவிகளும், அலுவலகப் பணியாளா்களும் மழையில் நனைந்தபடியே வீட்டுக்குச் சென்றனா்.

இந்த இடைவிடாத மழை நீரானது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக் கோவிலுக்குள் புகுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெருமாளை தரிசனம் செய்ய பக்தர்கள் செல்லும் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்திருந்தது. பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு பிறகு தடுப்புகளை எகிறி குதித்து சென்று சாமி தரிசனம் செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி