சட்டமன்ற நிலைகுழு தலைவரும், மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான செல்வப்பெருந்தகை இன்று (செப் 24) அளித்த பேட்டியில்,
கடந்த ஒரு வாரத்தில் தொடர்ந்து அவதூறுகளும், மிரட்டலும் விடுத்து வரும் பாசிச பாஜகவை கண்டித்து மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. அதில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களையும் அழைத்து ராகுல் காந்தியை பேசவிடாமல் முயற்சி செய்கின்ற பாஜகவை கண்டித்தும், ஆர்எஸ்எஸ் திட்டங்களை கண்டித்து மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணி எக்குக்கோட்டை போன்று வலிமையாக உள்ளது. உதயநிதி சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவர் துணை முதல்வராக வருவதை காங்கிரஸ் வரவேற்கிறது என தெரிவித்துள்ளார்.
விஜய் வரவு திமுகவை பாதிக்குமா என்ற கேள்விக்கு, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது மக்கள் மத்தியில் அதிருப்தி வரும். பிடிக்கவில்லை என்றால் எதிர்க்கட்சிக்கு போடுவார்கள். எது வேணாலும் நடக்கலாம். நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள்.
பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய இயக்குனர் மோகன்ஜீ கைது குறித்த கேள்விக்கு, லட்டு பற்றி கேள்விப்பட்டு உள்ளேன். பஞ்சாமிர்தத்தை பற்றி கேள்விப்படவில்லை. கற்பனைக் எட்டாத அளவுக்கு அவர் பேசியுள்ளார் என தெரிவித்தார்.