தெலுங்கானா மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்த அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் நாட்டிலேயே மூன்றாவது மாநிலமாக தெலுங்கானா உருவெடுத்துள்ளது. ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்கள் முன்பு ஜாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கியுள்ளன. இதுகுறித்து தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி வெளியிட்ட உத்தரவில், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.