விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவரணி மாவட்டத் துணை அமைப்பாளர் ஜெயக்குமார் இன்று(செப்.23) காலை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி அவரிடம் புகார் மனு அளித்தார்.
அம்மனுவில் 'கடந்த 20ஆம் தேதி அன்று எனது வாட்ஸ் அப்பில் திருச்சி எக்ஸ்பிரஸ் என்ற சமூக வலைத்தளதில் பள்ளி தாளாளரிடம் மிரட்டி பணம் கேட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் என்ற தலைப்பில் செய்தி வெளியாகி உள்ளது. அந்த புகாரை காஜாமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி தாளாளர் புகார் கொடுத்தாக கூறப்பட்டுள்ளது.
புகாரில் ஷாகுல் அமீது என்பவரின் மகன் அப்துல்லாஹ் என்பவர் எனது பள்ளி அருகில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது குழந்தைகள் எங்களது பள்ளியில் படித்து வருகின்றனர். இவர் விசிக கட்சியில் முக்கிய பதவியில் இருப்பதாகவும் தனது கட்சிக்கு நிதி வழங்க வேண்டும் என தொடர்பு கொண்டு மிரட்டி பணம் கேட்டார்.
அவருடைய நடவடிக்கை சரி இல்லாததால் நிதி தர மறுத்துவிட்டதால் ஏரியாவில் ஸ்கூல் நடத்த முடியாது என்று மிரட்டி உள்ளதாகவும், மேலும் விசிக பிரமுகர்கள் சிலர் சேர்ந்து கொண்டு பணம் கேட்டுள்ளதாகவும் பொய்யான புகார் கொடுத்துள்ளார். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.