புரட்டாசி 2ம் சனிக்கிழமை - ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் வழிபாடு

82பார்த்தது
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். இன்றளவும் தமிழகம் முழுவதும் இந்த வழிபாடானது பின்பற்றப்பட்டு வருகிறது. இன்று (செப்.,28) புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை என்பதால் வைணவ திருத்தலங்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ‌

அந்த வகையில் 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது

இந்த கோவிலுக்கு வழக்கமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதேபோல் இன்று (செப்.,28) காலையும் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதியில் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனர்.

காலை 6. 30 - மதியம் 12 மணி வரை, மதியம் 1. 30 - 3. 30 மணி வரை, மாலை 5. 30- இரவு 8. 30 மணி வரை மூலஸ்தான சேவை நடைபெற்றது. தரிசனம் முடித்த பக்தா்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கபட்டது. இதேபோல இக் கோயிலின் உபக் கோயிலான காட்டழகிய சிங்கபெருமாள் கோயிலிலும் ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா்

தொடர்புடைய செய்தி