திருச்சி தங்கம் என கவரிங் செயினை பறித்து சென்ற ஏமாளி திருடன்
ஸ்ரீரங்கம் கணபதி நகர் வித்யாலயா சாலையை சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி வசந்தி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டூவீலரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவன் வசந்தியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றான். டூவீலர் நபர்கள் பறித்து சென்றது கவரிங் நகைகள் என்பதால் வசந்தி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் அவருக்குள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தங்கம் என நினைத்து கவரிங் நகை பறித்து சென்ற ஏமாளி திருடர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.