வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் நவ. 9, 10, 11, 13, 14 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.